உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளி தற்கொலை விவகாரம் கூடுதல் இழப்பீடு கேட்டு உறவினர்கள் தர்ணா போராட்டம்

தொழிலாளி தற்கொலை விவகாரம் கூடுதல் இழப்பீடு கேட்டு உறவினர்கள் தர்ணா போராட்டம்

சேலம்: சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கணக்குப்பட்டியை சேர்ந்த அய்யந்துரை, 30, சொந்தமாக விசைத்தறி தொழில் செய்து வந்தார். இவர், தொழில் அபிவிருத்திக்காக இளம்பிள்ளையில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில், 4 லட்ச ரூபாய் கடன் வாங்கி, சரிவர திருப்பி செலுத்தவில்லை. இந்த பிரச்னையில், மனைவி சினேகா கோபித்து கொண்டு, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த, 30ல், பைனான்ஸ் ஊழியர் சங்கர், வீடு தேடி சென்று அய்யந்துரையிடம், பணம் கேட்டுள்ளார். அந்த மன உளைச்சலில் தனியாக இருந்த அய்யந்துரை, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தாரமங்கலம் போலீசார் வழக்கு-ப்பதிவு செய்தனர். மறுநாள், பைனான்ஸ் நிறுவனம் மீது நடவ-டிக்கை எடுக்க வலியுறுத்தி, அய்யந்துரை உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் சுப்ரமணி, பேச்சு-வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய-ளித்தார். அதையடுத்து, தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், அய்யந்துரை மனைவி சினேகா மற்றும் உறவி-னர்கள் நேற்று காலை, 11:30 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். அப்-போது உறவினர் ஒருவர் பையில், பெட்ரோல் கேன் வைத்திருப்-பதை கண்டுபிடித்து, போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு உண்டானது. பைனான்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, உரிய இழப்பீடு பெற்று தரும்படி, தர்ணா செய்தவர்கள் முறை-யிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின், சினேகா மற்றும் மூவர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.போலீசார் கூறுகையில், 'பைனான்ஸ் நிறுவனத்திடம் பேசி, கடனை தள்ளுபடி செய்து, அய்யந்துரையின் இரு குழந்தைக-ளுக்கு, தலா ஒரு லட்ச ரூபாய் தருவதாக பேசி முடிக்கப்பட்டது. ஆனால், கூடுதல் இழப்பீடு கேட்டு தர்ணாவில் ஈடுபட்டதால், மேல் விசாரணை நடத்தப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை