உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின் அலுவலகங்கள் இடமாற்றம்

மின் அலுவலகங்கள் இடமாற்றம்

பனமரத்துப்பட்டி மல்லுார் மேற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம், அதே பகுதியில் தனியார் வாடகை கட்டடத்தில் செயல்பட்டது. தற்போது அம்மாபாளையம் ஊராட்சி கல்லியன் வலசு, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி அருகே தனியார் கட்டடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு இன்று முதல் அலுவலகம் செயல்படும். இதனால் மல்லுார், வேங்காம்பட்டி, வாழக்குட்டப்பட்டி, பாரப்பட்டி, மூக்குத்திபாளையம், மேச்சேரியம்பாளையம், வடகாடு, பசுவநத்தம்பட்டி, ஏர்வாடி, எருமநாயக்கன்பாளையம், ஏர்சனாம்பட்டி, வெற்றி நகர், பனங்காடு பகுதி மக்கள் பயன்படுத்திக்கெள்ளலாம் என, சேலம் தெற்கு செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார். அதேபோல் மல்லுாரில் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த, மல்லுார் கிழக்கு பிரிவு மின் வாரிய அலுவலகம், நாமக்கல் மாவட்டம் கீரனுார் துணை மின் நிலையம் எதிரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை