மேலும் செய்திகள்
மின்விளக்குகளை இயக்கி மேயர் துவக்கிவைப்பு
11-May-2025
சேலம், சேலம், அல்லிக்குட்டை ஏரியை, 10 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணிக்கு, 2023ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அம்மாபேட்டை மண்டலத்தில், 23.65 ஏக்கரில் உள்ள, இந்த ஏரி துார்வாரப்பட்டு, கரை நீளம், நடைபாதை, மும்முனை சுவர், சாய்தள சுவர், சங்கிலி இணைப்பு வேலிகள், மின் விளக்கு, சுகாதார வளாகம், விளையாட்டு உபகரணங்கள், இருக்கை வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது பணி நிறைவடைந்த நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், முதல்வர் ஸ்டாலின், நேற்று, அல்லிக்குட்டை ஏரியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து ஏரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன், துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
11-May-2025