உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கடனை தராமல் தாக்கிய 2 பேருக்கு காப்பு

கடனை தராமல் தாக்கிய 2 பேருக்கு காப்பு

சேலம் :சேலம், லைன்மேடு, பென்ஷனர் லைன், 4வது தெருவை சேர்ந்தவர் சல்மான், 33. இவரிடம், அதே பகுதியை சேர்ந்த ஹாருன், 32, என்பவர், 50,000 ரூபாய் கடன் பெற்று, திருப்பி தராமல் போக்குக்காட்டி வந்தார். இதுதொடர்பாக கடந்த, 13ல், தகராறு ஏற்பட்டு சல்மானை, அவரது வீடு அருகே, ஹாருன், கூட்டாளியுடன் சேர்ந்து, உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர். படுகாயமடைந்த சல்மான், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார், ஹாருன், அவரது கூட்டாளியான தாதகாப்பட்டி, வேலு புதுத்தெருவை சேர்ந்த சையத்பயாஸ், 38, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை