உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.12 லட்சம் கொள்ளை வழக்கில் தலைமறைவானவருக்கு காப்பு

ரூ.12 லட்சம் கொள்ளை வழக்கில் தலைமறைவானவருக்கு காப்பு

சேலம்:கத்தியை காட்டி மிரட்டி, தனியார் நிதி நிறுவன ஊழியரிடம், ரூ.12 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், தலைமறைவாக இருந்தவரை, போலீசார் கைது செய்தனர்.கடந்த ஜூன் 14ல், ஐ.டி.எப்.சி., எனும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், 12 லட்சத்து, 9,100 ரூபாயை வங்கியில் டிபாசிட் செய்ய எடுத்து சென்றனர். உடையாப்பட்டி கடலுார் மெயின் ரோடு, கந்தகிரி ஸ்பின்னிங் மில் எதிரில் வரும் போது, மர்ம கும்பல் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அப்பணத்தை கொள்ளையடித்து சென்றது.இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 8 பேரை கைது செய்திருந்தனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம், மாத்துார் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த ஹரிகரன், 24, என்பவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !