உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உடும்பு பிடித்து கொன்ற இருவருக்கு காப்பு

உடும்பு பிடித்து கொன்ற இருவருக்கு காப்பு

மேட்டூர்: அரிய வகை உயிரினமான உடும்பை பிடித்து கொண்டு வந்தவர், அதனை கொன்றவர் உள்பட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.மேட்டூர், நவப்பட்டி ஊராட்சி, காவேரிகிராஸ் பொங்கியண்ணன் நகர் மயில்சாமி மனைவி கூலி தொழிலாளி மாரியம்மாள், 45. மயில்சாமியின் சகோதரர் மீனவர் எழுமலை, 44. நேற்று முன்தினம் சோளத்தட்டு வெட்டும் வேலைக்கு சென்ற மாரியம்மாள், 2 கிலோ எடையுள்ள உடும்பை பிடித்து கொண்டு வந்துள்ளார்.அதனை ஏழுமலையிடம் கொடுத்து வெட்டி சுத்தம் செய்யும்படி கூறியுள்ளார். ஏழுமலையும் உடும்பை வெட்டி சுத்தம் செய்தார். அது குறித்து மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணை முடிவில், அழிந்து வரும் அரிய வகை உயிரினமாக கருதப்படும் உடும்பை பிடித்து கொண்டு வந்த மாரியம்மாள், அதனை வெட்டி சுத்தம் செய்த ஏழுமலை ஆகிய இருவரையும் நேற்று மாலை மேட்டூர் வனத்துறையினர் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ