உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 300 மது பாட்டில்கள் கடத்திய நபருக்கு காப்பு

300 மது பாட்டில்கள் கடத்திய நபருக்கு காப்பு

சேலம்: சேலம் அருகே, அனுமதியின்றி மது பாட்டிலகளை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.சேலம் அருகே, குப்பனுார் சோதனைச்சாவடி பகுதியில், நேற்று மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக, வீராணம் போலீசாருக்கு ரக-சிய தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில், போலீசார் வாகன சோத-னையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வேனில், 300 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து விசாரணை மேற்கொண்டதில், மதுபாட்டில்களை கடத்தியது ஏற்காடு மாரமங்கலம் பகுதியை சேர்ந்த சிவகுமார், 40, என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், 300 மது பாட்டில்களையும் பறி-முதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ