உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒதுக்கிய கடைகளுக்கு வாடகை குறைக்க மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானம்

ஒதுக்கிய கடைகளுக்கு வாடகை குறைக்க மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானம்

மேட்டூர், மேட்டூர் பஸ் ஸ்டாண்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கிய கடைகளுக்கு வாடகை குறைக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மேட்டூர் வட்ட இரண்டாவது மாநாடு நேற்று தனியார் மண்டபத்தில் துவங்கியது. மேட்டூர் வட்ட மாற்றுத்திறனாளிகள், பஸ் ஸ்டாண்டில் இருந்து பேரணியாக மண்டபத்துக்கு சென்றனர். மாநாட்டில், மாநில தலைவர் வில்சன், மாவட்ட செயலாளர் குணசேகரன், ஜான்பெர்ணான்டஸ் முன்னிலை வகித்தனர். மாநாட்டில், ஊரக வேலை திட்டத்தை நகராட்சிகளில் துவங்கி, மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அரசு பணிகளில், 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளுக்கு, மற்ற வியாபாரிகளுக்கு நிர்ணயித்த வைப்பு தொகை, வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை