உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் - மொபட் மோதல் ஓய்வு மின் ஊழியர் பலி

பைக் - மொபட் மோதல் ஓய்வு மின் ஊழியர் பலி

மேட்டூர் மேட்டூர், மாதையன்குட்டை, அம்மன் நகரை சேர்ந்தவர் மணி, 74. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு மேட்டூர், நாட்டாமங்கலம் அருகே டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திருப்பூர், முருகன்பாளையத்தை சேர்ந்த, தையல் தொழிலாளி மணிகண்டன், 29, ஓட்டி வந்த, 'யுனிகான்' பைக், மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணி நேற்று முன்தினம் உயிரிழந்தார். மணிகண்டனும் காயம் அடைந்தார். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ