உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் ஓய்வூதிய பலன் கேட்டு சாலைமறியல்

ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் ஓய்வூதிய பலன் கேட்டு சாலைமறியல்

ஆத்துார்: ஓய்வு பெற்ற நகராட்சி துாய்மை பணியாளர்கள், ஓய்வூதிய பலன் கேட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆத்துார் நகராட்சியில், 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், நான்கு ஆண்டுகளுக்கு முன், ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்களுக்கு, ஓய்வூதிய பலன் வழங்கவில்லை. இதுகுறித்து, நகராட்சி அலுவலகத்தில் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று மாலை, 5:50 மணியளவில் ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள், ஓய்வூதிய பலன் வழங்கக்கோரி, நகராட்சி அலுவலகம் எதிரே, ராணிப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்துார் டவுன் போலீசார், ஓய்வு துாய்மை பணியாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 'நகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை