ஆறு துார்வாரும் பணி ஆய்வு
ஓமலுார்: நீர் வள பொதுப்பணித்துறை சார்பில், 24 லட்சம் ரூபாய் மதிப்பில், காடையாம்பட்டி தாலுகாவில் கே.எஸ்.புதுார், காடை-யம்பட்டி, பண்ணப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கு சரபங்கா ஆறு மற்றும் நீர்வழிப்பாதை துார்வாரும் பணி நடக்கிறது. அப்பணியை, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறி-யாளர் அண்ணாமலை, நேற்று முன்தினம் பார்வையிட்டார். செயற்பொறியாளர் வெங்கடாசலம் உடனிருந்தார்.