உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூரில் சாலை ஆக்கிரமிப்பு சேலத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் சாலை ஆக்கிரமிப்பு சேலத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், :மேட்டூரில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றி பட்டா கேட்டு, அப்பகுதி மக்கள், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் அம்பேத்கர் மக்கள் மைய நிறுவன தலைவர் சசிகுமார் தலைமை வகித்து பேசியதாவது:மேட்டூர், 29வது வார்டு, 4 ரோடு அருகே, ஹவுசிங் போர்டு, முல்லை நகர், ஜீவா நகர் என அடுத்தடுத்து உள்ள பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவை, 1986ல் வீட்டு வசதி வாரியம் சார்பில், விற்கப்பட்ட வீட்டுமனைகள். அதற்காக நிர்மானிக்கப்பட்ட, 80 அடி சாலை, பொது பாதையாக இருந்தது. ஆக்கிரமிப்பால் தற்போது, 20 அடி சாலையாக குறுகிவிட்டது. அதை கண்டித்து, ஆக்கிரமிப்பை அகற்றி, குடியிருப்புகளுக்கு பட்டா கேட்டு, தற்போது, 7ம் கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.குடியிருப்பு உரிமையாளர் சங்க தலைவர் அசோக்குமார், மகளிரணி செயலர் பூங்கொடி உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி