மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு பிரசுரம் வழங்கல்
08-Jan-2025
வீரபாண்டி: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.ஜன., 11 முதல் 17 வரை, சாலை பாதுகாப்பு வார விழா கொண்-டாடப்படுகிறது. இதன்படி, ஆட்டையாம்பட்டி தீயணைப்புத்-துறை சார்பில் தலைக்கவசம் உயிர் கவசம், உரிமம் வாங்க எட்டு போடு, உயிரை காக்க ஹெல்மேட் போடு, காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிவது அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கி வருகின்றனர்.ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்டு, சந்தைப்பேட்டை, மாரி-யம்மன் கோவில் காய்கறி சந்தை, பாலம்பட்டி, அரியானுார், காகாபாளையம், பெருமாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கும் பணியில், நிலைய அலுவலர் உதய-குமார் தலைமையில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
08-Jan-2025