கூட்டு பலாத்காரம் செய்து பெண் படுகொலை சேலத்தில் ரவுடி, கூட்டாளி கைது
சேலம்: குடி போதையில், பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ரவுடி, அவரின் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அருகே வாய்க்கால் பட்ட-றையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மலர், 43, கடந்த மாதம், 25ம் தேதி காலை இனாம் பைரோஜி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்ஸில் ஏறி, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ-மனைக்கு செல்ல வந்தார். பின், அவர் தனது கணவரிடம் சேலம் வந்து விட்டதாகவும், ஆட்டோவில் மருத்துவமனை செல்வதாக கூறினார். சிறிது நேரத்திற்கு பின் ராஜ், தன் மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாகியும் மலர் வீடு திரும்பாததால், மலர் குடும்பத்தினர் மருத்துவமனையில் விசாரித்தனர்.அதற்கு அவர்கள், 'நீங்கள் கூறும் நபர் சிகிச்சை பெற மருத்துவ-மனை வரவில்லை' என தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த மலர் குடும்பத்தினர். பல்வேறு இடங்களில் விசாரித்தும், தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கடந்த, 27ல் மாநகர துணை போலீஸ் கமிஷனர் வேல்முருகனிடம், ராஜ் புகார் கொடுத்தார்.அவரது உத்தரவின்படி கடந்த, 28ல் மலர் காணாமல் போனது தொடர்பாக, டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மலரை கண்டுபிடிப்பதற்காக, அவருடைய மொபைலில் யாரிடம் எல்லாம் பேசி இருக்கிறார்; கடைசியாக யாரிடம் பேசி இருக்-கிறார் என்ற தகவலை போலீசார் பெற்றனர். அதில், மலரிடம் கடைசியாக பேசியது, கன்னங்குறிச்சி தாமரை நகரை சேர்ந்த பூண்டு வியாபாரி கனகராஜ், 32, என்பதும், இவர் பெயர் கன்னங்-குறிச்சி ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரியவந்-தது. அவரை பிடித்து, நேற்று முன்தினம் போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கனகராஜ் பூண்டு வியாபாரம் செய்ய மலர் ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டு, 10 நாட்களாக மொபைலில் பேசி வந்தனர். கடந்த, 25ல் கனகராஜை பார்க்க காலை, 10:00 மணிக்கு கோரிமேடுக்கு மலர் வந்துள்ளார். கனகராஜ் தன்னுடைய கூட்-டாளி கன்னங்குறிச்சி தாமரை நகரை சேர்ந்த சக்திவேல், 29, என்-பவரை அழைத்து சென்று, ஏற்காடு சோதனைச்சாவடி அருகே மறைவான இடத்தில் நிற்குமாறு கூறினார்.இதையடுத்து டி.வி.எஸ். எக்ஸல் மொபட்டில் மலருடன், காட்டு பகுதிக்குள் கனகராஜ் சென்றார். அங்கு குடிபோதையில் இருந்த கனகராஜ் மலரை பலாத்காரம் செய்தார். அப்போது அங்கு வந்த சக்திவேலும், மலரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் மலர், கனகராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கனகராஜ், மலரின் தலையில் கையால் குத்தியதால் மயக்கம் அடைந்தார்.தொடர்ந்து வலுக்கட்டாயமாக குடிபோதையில் சக்திவேல், கன-கராஜ் மாறி, மாறி மலரை கூட்டு பலாத்காரம் செய்தனர். பின் இருவரும் சேர்ந்து மலரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்-ளனர். பின் அவரது உடலை முட்புதரில், நிர்வாண நிலையில் தள்-ளிவிட்டு சென்றுள்ளனர்.இவ்வாறு கூறினர்.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு சென்று, மலர் உடலை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக கனகராஜ், சக்திவேல் கைது செய்யப்பட்டனர்.