உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டவுன் பஞ்., ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது

டவுன் பஞ்., ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது

மேட்டூர்: மேட்டூர், தொட்டில்பட்டியை சேர்ந்தவர் கண்ணன், 37. பி.என். பட்டி டவுன் பஞ்சாயத்தில் துாய்மை பணியாளராக உள்ளார். இவர் நேற்று மதியம், 12:00 மணிக்கு, பைக்கில் அருகிலுள்ள தாழையூருக்கு சென்றார். சங்கிலி முனியப்பன் கோவில் அருகே சென்றபோது பைக்கை, அங்கு நின்றிருந்த, மேட்டூர், டி.எம்.பி., நகர், சின்னைய ரெட்டி தெருவை சேர்ந்த ரவுடி கார்த்திக், 25, என்பவர் நிறுத்தியுள்ளார். பின் கண்ணன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் பையில் இருந்து, 850 ரூபாயை பறித்துக்-கொண்டு ஓடிவிட்டார். கண்ணன் புகார்படி கருமலைக்கூடல் போலீசார், கார்த்திக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ