மேலும் செய்திகள்
ரவுடி கொலை வழக்கு மேலும் 3 பேர் சிக்கினர்
29-Oct-2026
சேலம்:சேலம், ஜாகீர் சின்னம்மாபாளையத்தை சேர்ந்த ரவுடி டேவிட், 40. கடந்த, 26ல் புதுரோடு அருகே, கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கூலிப்படை தலைவனான ரவுடி தீனதயாளன் மற்றும் டேவிட்டின் நண்பரான அமிர்தராஜ், வேறு வழக்குகளில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், டேவிட் கொலை வழக்கிலும் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து காவலில் எடுத்து விசாரிக்க, மனுதாக்கல் செய்துள்ளனர்.அதேபோல் காரிப்பட்டியில் கடந்த ஆண்டு நடந்த பட்டறை சரவணன் கொலையில் கைதான ரவுடி தீபன்ராஜையும், டேவிட் கொலை வழக்கில் கைது செய்தனர்.
29-Oct-2026