உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.10 கோடி மோசடி: பள்ளி தாளாளர் கைது

ரூ.10 கோடி மோசடி: பள்ளி தாளாளர் கைது

சேலம்: சென்னை, சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 43. இவர் கடந்த ஜனவரியில், சேலம் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் அளித்த மனு:தர்மபுரி மாவட்டம் கடத்துாரில் உள்ள தனியார் பள்ளி தாளாளரான, பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த முனிரத்தினம், 38, கல்குவாரி தொழில் அமைக்கலாம் என கூறி, 10 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு, ஒப்பந்த பத்திரம் தயார் செய்து கொடுத்தார்.பின் அது போலி பத்திரம் என தெரிந்து பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்த நிலையில், முனிரத்தினத்தை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ