ரூ.100 கோடி மோசடி வழக்கு -தம்பதி ஜாமின் மனு தள்ளுபடி
சேலம், சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பெயரில், 100 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 54, அவரது மனைவி கரோலின் ஜான்சிராணி, 47, ஆகியோரை, கடந்த மே, 3ல், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, கடந்த 27ல், கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது. மீண்டும் தாக்கல் செய்த ஜாமின் மனு, நேற்று, விசாரணைக்கு வந்தது. போலீசார் ஆட்சேபம் தெரிவிக்க, நீதிபதி செந்தில்குமார், தம்பதி ஜாமினை மீண்டும் தள்ளுபடி செய்தார்.காவல் நீட்டிப்புமேட்டூர், விருதாசம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 63. மேட்டூர் அணை, ராமன் நகரில், குறிஞ்சி நிதி நிறுவனம் நடத்தி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தார். இவரை சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த மே, 20ல் கைது செய்தனர். இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராமசாமியின் நீதிமன்ற காவலை, 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் ஜூலை, 1 வரை, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.