உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ. 2 கோடி மதிப்பிலான திட்டப்பணி துவக்கம்

ரூ. 2 கோடி மதிப்பிலான திட்டப்பணி துவக்கம்

ஓமலுார்: ஓமலுார் வட்டத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான திட்-டப்பணிகளை, சேலம் வடக்கு எம்.எல்.ஏ., ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ஓமலுார் ஒன்றியத்துக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டியில், ரூ.45 லட்சம் மதிப்பில் மறவன்குறை சாலை, பெரியேரிப்பட்டி ஊராட்சியில், 62 லட்சம் ரூபாயில் அம்மன்கோவில்பட்டி சாலை, சிக்கம்பட்டி ஊராட்சியில், 14 லட்சம் ரூபாயில் மிளகாய்காரனுார் சாலை, 48 லட்சம் ரூபாயில் அமரகுந்தி சாலை.தொளசம்பட்டி ஊராட்சி பூம்பட்டியில், மாவட்ட கவுன்சிலர் நிதியில், 18 லட்சம் ரூபாயில் நீர் தேக்கத்தொட்டி, எம்.செட்டிப்-பட்டி மற்றும் பெரியேரிப்பட்டி ஊராட்சியில் புதிய நீர் தேக்க தொட்டிகள், ஓமலுார் கோட்டைமாரியம்மன் கோவில் ஊராட்-சியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் சாக்கடை உள்ளிட்ட, இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான திட்-டப்பணிகளை நேற்று, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.மாவட்ட கவுன்சிலர் சண்முகம், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் செல்வகுமரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை