உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒர்க்ஷாப் பூட்டை உடைத்து ரூ.55 ஆயிரம் திருட்டு

ஒர்க்ஷாப் பூட்டை உடைத்து ரூ.55 ஆயிரம் திருட்டு

சேலம், ஒர்க் ஷாப் பூட்டை உடைத்து, ரூ.55 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன், 53. இவர் சூரமங்கலம் மேத்தா நகர் பகுதியில் ஆட்டோ ஒர்க்ஷாப் வைத்துள்ளார். கடந்த, 23ல் ஒர்க் ஷாப்பை மூடிவிட்டு, வீட்டுக்கு சென்றவர், நேற்று முன்தினம் காலை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம், உண்டியலில் சேர்த்து வைத்திருந்த, ரூ.20 ஆயிரம் என, 55 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி