உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4 வாகனங்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்

4 வாகனங்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்

ஆத்துார், விதிகள் மீறி வைக்கோல் ஏற்றி வந்த நான்கு வாகனங்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலர், 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.ஆத்துார் பகுதியில், நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா உள்ளிட்ட அலுவலர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மூன்று மினி சரக்கு வேன், ஒரு மினி லாரி என, மொத்தம் நான்கு வாகனங்களில், விதிகள் மீறி அதிகளவில் வைக்கோல் ஏற்றி வந்ததால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர். வாகனங்களுக்கு தலா, 20 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !