மேலும் செய்திகள்
பி.டி.ஓ., பொறுப்பேற்பு
09-Oct-2025
பனமரத்துப்பட்டி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட கிளை தலைவர் மதன் தலைமை வகித்தார். அதில் ஊராட்சி செயலர்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி உள்ளிட்டோர் பேசினர்.தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரை கண்டித்தும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பணிப்பார்வையாளர் செந்தில்குமார் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.இதில் அலுவலக பணியாளர்கள், துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.அதேபோல் ஓமலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டார தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். அதில், பி.டி.ஓ., உமாசங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். காடையாம்பட்டி, நங்கவள்ளி ஒன்றிய அலுவலகத்திலும் போராட்டம் நடந்தது.
09-Oct-2025