சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு
சேலம், சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக பிரவீன் குமார் அபினபு பணியாற்றி வந்தார். அவர் சென்னைக்கு மாற்றப்பட்டார். இதனால், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனில்குமார் கிரி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சேலம் தெற்கு துணை கமிஷனர் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா, தலைமையிடத்து துணை கமிஷனர் கீதா, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.