உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீபாவளி பண்டிகைக்கு சேலம் கோட்டம் சார்பில் 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகைக்கு சேலம் கோட்டம் சார்பில் 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம், சேலம் கோட்டத்தில் மொத்தம், 1,900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் 13 வரை பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து, பயணிகளின் தேவைகேற்ப, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.வரும் 20ல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழக கோட்டங்களிலும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம் கோட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் வசதிக்காக 16 முதல், 23 வரை சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், ஓசூருக்கும்; சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், மற்றும் பெங்களூரு, பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஓசூரில் இருந்து சென்னை, சேலம், புதுச்சேரி, கடலுார், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் இருந்து சென்னை, ஈரோட்டில் இருந்து பெங்களூரு, திருச்சியில் இருந்து ஓசூர், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு, 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு, திரும்பி வர ஏதுவாக சிறப்பு பஸ்கள் மற்றும் புறநகர் வழித்தட பஸ்கள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படுகின்றன. சேலம், நாமக்கல், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகர பகுதிகளில், அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் டவுன் பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் www.tnstc.inமற்றும் ஆப் tnstc bus ticket booking app வழியாகவும், முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.இத்தகவலை, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி