உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாஜி அமைச்சர் கைது கண்டித்து போராட்டம்

மாஜி அமைச்சர் கைது கண்டித்து போராட்டம்

வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில், மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ய முயன்ற தி.மு.க.,வினர், 90 பேரை போலீஸார் கைது செய்தனர்.நிலஅபகரிப்பு வழக்கில், மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே போராட்டம் செய்ய முயன்ற தி.மு.க.,வினர், 20 பேரை, வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர்.புத்திரகவுண்டன்பாளையம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர், 37 பேரை, ஏத்தாப்பூர் போலீஸார் கைது செய்தனர்.அயோத்தியாப்பட்டணம் பகுதியில் போராட்டம் நடத்திய, 33 பேரை காரிப்பட்டி போலீஸார் கைது செய்தனர். வாழப்பாடி, காரிப்பட்டி மற்றும் ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் மட்டும், 90 தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை