உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழக அணிக்கு தேர்வான கபடி வீரருக்கு பாராட்டு

தமிழக அணிக்கு தேர்வான கபடி வீரருக்கு பாராட்டு

சேலம்: இந்திய தேசிய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில், அக்டோபர் மாதம் இறுதியில், தேசிய கபடி சாம்பியன் போட்டி நடக்க உள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், போட்டி நடக்கிறது. இப்போட்டியில், தமிழக அணி சார்பில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலந்து கொள்ள, சேலம் அயோத்தியாபட்டிணத்தை சேர்ந்த கபடி வீரர் சோலேஷ்வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்காட்டில் நடந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழாவில், கபடி வீரர் சோலேஷ்வசந்தை பாராட்டி, எம்.எல்.ஏ., பெருமாள் பரிசு வழங்கி கவுரவித்தார். சேலம் மாவட்ட கபடி கழக தலைவர் தனபாலன், கட்சி பிரமுகர்கள் மணி, ராஜா, நகர செயலாளர் ரவிசேகர், அகில இந்திய மின்வாரிய விளையாட்டு வீரரும், பயிற்சியாளருமான செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ