ஜூலை 6ல் 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:
ஜூலை, 6ல், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே மாரநாயக்கனஹள்ளி ரயில்வே மேம்பாலத்தில், பொறியியல் தொழில்நுட்ப பணி மேற்கொள்ளப்படுவதால், அன்று, அந்த வழியே இயக்கப்படும், 5 ரயில்கள், மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட உள்ளது.அதன்படி பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து, மதியம், 2:20 மணிக்கு புறப்படும் கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஓசூர், தர்மபுரி தடத்துக்கு மாற்றாக, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, திருப்பத்துார் வழியே இயக்கப்படும். அதேபோல் யஷ்வந்த்பூர் - சேலம் முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் ரயில்; மாலை, 5:15க்கு புறப்படும், பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலும், மாற்றுப்பாதையில் செல்லும்.கோவை ஜங்ஷன் - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில், காலை, 7:25 மணிக்கு புறப்பட்டு, திருப்பத்துார், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியே செல்லும். அதே தடத்தில், காலை, 8:50 மணிக்கு புறப்படும் கோவை - லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்.