உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வசிஷ்ட நதியில் குளித்த பள்ளி மாணவர் உயிரிழப்பு

வசிஷ்ட நதியில் குளித்த பள்ளி மாணவர் உயிரிழப்பு

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், பனைமடலை சேர்ந்த, இளங்-கோவன், கேரளாவில் தங்கி கூலி வேலை செய்கிறார். இவரது மனைவி சித்ரா, ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன் பூவரசன், 15. வாழப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். தாத்தா முனியன் பராமரிப்பில் இருந்தார்.இந்நிலையில் பூவரசன், அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன், செக்கடிப்பட்டியில் உள்ள வசிஷ்ட நதி ஆற்றில், நேற்று காலை, 11:30 மணிக்கு குளித்தார். நீச்சல் தெரியாத நிலையில், சற்று ஆழமான பகுதியில் இறங்கியபோது பூவரசன் மூழ்கிவிட்டார். நண்பர்கள் கூச்சலிட்டனர். மக்கள் தேடிய நிலையில், சடலமா-கவே மீட்க முடிந்தது. ஏத்தாப்பூர் போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !