உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி மாணவர்கள் அவதி

பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி மாணவர்கள் அவதி

பஸ்கள் இயக்கப்படாததால்பள்ளி மாணவர்கள் அவதிஏற்காடு, டிச. 8-ஏற்காட்டில் இருந்து, 10 கி.மீ.,ல் நாகலுார் கிராமம் உள்ளது. அங்கு அரசு மாதிரி பள்ளி உள்ளது. அதில், ஏற்காடு டவுன் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆனால் நாகலுார் சாலையில் உள்ள மரப்பாலம் பகுதியில், தரைப்பாலத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வந்த நிலையில், மழை வந்து அதிகளவில் தண்ணீர் ஓடியது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது மழைநீர் வடிந்த நிலையிலும், அரசு பஸ் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவியர், அப்பகுதி கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கடந்த, 3 நாட்களாக பள்ளி குழந்தைகள், மரப்பாலம் வரை வாடகை வாகனத்தில் சென்று, அங்கிருந்து, 2 கி.மீ., நடந்து பள்ளிக்கு சென்றனர். அரையாண்டு தேர்வு தொடங்க உள்ளதால், பஸ் சேவையை உடனே தொடங்க, மாணவ, மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை