உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி மாணவி மாத்திரை சாப்பிட்ட விவகாரம்; கல்வி அதிகாரி விசாரணை

பள்ளி மாணவி மாத்திரை சாப்பிட்ட விவகாரம்; கல்வி அதிகாரி விசாரணை

வாழப்பாடி, சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு, 10ம் வகுப்பு பயிலும் சர்க்கார் நாட்டாமங்கலத்தை சேர்ந்த விவசாயி மகள் 16 வயது சிறுமி. இவர் கடந்த, 15ல் உடல்நிலை சரியில்லாததால் விடுமுறை எடுத்தார். மறுநாள் பள்ளிக்கு சென்றபோது, பள்ளியின் ஆசிரியர் மற்றும் முதல்வர் தண்டனை கொடுத்ததாக கூறி, 11 மாத்திரைகளை சாப்பிட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் விசாரித்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில்,'' தனியார் பள்ளி மாணவி மாத்திரை சாப்பிட்டது தொடர்பாக, தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் விசாரிக்கிறார். அவர் அளிக்கும் அறிக்கையின் பேரில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !