உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளிகள் இன்று திறப்பு பாடப்புத்தகங்கள் தயார்

பள்ளிகள் இன்று திறப்பு பாடப்புத்தகங்கள் தயார்

சேலம்: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதை முன்னிட்டு, சேலத்தில் உள்ள அரசு, அதன் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, முதல் நாளே அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க வசதியாக, சில நாட்களாக அந்தந்த பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்தது. இறுதி நாளான நேற்றும், மாநகர எல்லைக்குள் உள்ள பள்ளிகளுக்கு, பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டன. மேலும் ஒரு வாரமாக, வகுப்பறை கட்டட மராமத்து பணி, மின்சாதனங்கள் பழுதை சரிபார்த்தல், வளாகம் முழுதும் சுத்தப்படுத்தி, கிருமி நாசினி அடித்து தயார்படுத்தப்பட்டன. நேற்று ஏராளமான பெற்றோர், சேலத்தில் ஆங்காங்கே உள்ள கடைகளில், ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், வாட்டர் பாட்டில், ஸ்னாக்ஸ் பாக்ஸ் வாங்க குவிந்தனர். ஸ்கூல் பேக், 350 முதல், 1,750 ரூபாய், லஞ்ச் பேக், 100 முதல், 200 ரூபாய் வரை விற்பனையானது. ஸ்டேஷனரி கடைகளிலும் விற்பனை அமோகமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ