மேலும் செய்திகள்
ஜூலைக்குள் ஏரி பணி முடிக்க கமிஷனர் உத்தரவு
10-Jul-2025
சேலம், சேலம் மாநகராட்சியில், ரூ.3.22 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் அறிவியல் பூங்கா பணிகளை, நேற்று கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்தார்.சேலம் அம்மாபேட்டை மண்டலம், 9 வது வார்டில் உள்ள வர்மா சிட்டி வளாகத்தில், ரூ.3.22 கோடி மதிப்பிலான அறிவியல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. 420 மீட்டர் நீளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, 375 மீட்டர் நீளத்துக்கு நடைபாதை, கழிப்பிடம், மின் அறை, காவலர் அறை, கட்டண சீட்டு அறை, விளையாட்டு உபகரணங்கள், அறிவியல் உபகரணங்கள், 25 'சிசிடிவி' கேமரா அமைக்கும் பணி, 30 கிரானைட் இருக்கைகள், 15 குப்பை சேகரிக்கும் தொட்டி, 36 மின் விளக்கு உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.இப்பணிகளை, நேற்று கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து தாதம்பட்டி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் ஆய்வு செய்தார். மாநகர பொறியாளர் செல்வநாயகம், உதவி கமிஷனர் வேடியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
10-Jul-2025