உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செவிலியையிடம் சீண்டல் காவலாளி கை உடைப்பு

செவிலியையிடம் சீண்டல் காவலாளி கை உடைப்பு

சேலம், நசேலம், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிபவர் ராஜாகண்ணு, 67. இவர், கடந்த அக்., 30 மாலை, மருத்துவமனையில் இருந்தார். அப்போது, அங்கு வந்த, 4 பேர், அவரை மரக்கட்டையால் தாக்கி, அவரது கையை அடித்து உடைத்துச்சென்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரித்ததில், அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியை ஒருவரிடம், ராஜாகண்ணு சில்மிஷம் செய்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ