உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டாஸ்மாக் விற்பனை இலக்கு ரூ.350 கோடி ஆடி பெருக்கு தினத்தில் தட்டுப்பாடு தவிர்க்க 50 சதவீதம் கூடுதல் இருப்பு வைக்க உத்தரவு

டாஸ்மாக் விற்பனை இலக்கு ரூ.350 கோடி ஆடி பெருக்கு தினத்தில் தட்டுப்பாடு தவிர்க்க 50 சதவீதம் கூடுதல் இருப்பு வைக்க உத்தரவு

சேலம்: ஆடி 18ம் பெருக்கு பண்டிகைய முன்னிட்டு, கொங்கு மண்டலம் மற்றும் காவேரி டெல்டா மாவட்ட டாஸ்மாக் கடைகளில் தட்டுப்பாடு இன்றி சரக்கு விநியோகம் செய்யும் வகையில், 50 சதவீதம் கூடுதல் சரக்கு இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான சரக்கு சப்ளை பணி, ஜூலை 29 முதல் துவங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் ஆடி 18ம் பெருக்கு பண்டிகை, காவேரி ஆற்றின் கரையோர மாவட்டங்களில் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் கோவை, சேலம், திருச்சி மண்டலங்களுக்கு உட்பட்ட கடைகளுக்கு, ஆடி பெருக்கை முன்னிட்டு சரக்கு சப்ளையை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அந்த வகையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு, மது சப்ளையில், 50 சதவீதம் வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. கொங்கு மண்டலம் மற்றும் காவேரி டெல்டா மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு, வழக்கமாக தினந்தோறும் சப்ளை செய்யப்படும், 50 லட்சம் பாட்டில் சரக்குகள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு, ஒரு கோடியே, 50 லட்சம் பாட்டில் சரக்குகளை, ஜூலை 29 முதல் சப்ளை செய்யும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.அந்தந்த மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு, ஐ.எம்.எஃப்.எஸ்., பீர், ஒயின் என தேவைக்கு தக்கபடி சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடைகளில் விற்பனையை பொருத்து, சரக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆடி 18ம் பெருக்கு பண்டிகை நாளில், சரக்கு தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மாவட்டத்துக்கு, 10 லாரிகளில் சரக்குளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களும், பணியில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சரக்கு விலை ஏற்றம் செய்து, விற்பனை செய்யும், விற்பனையாளர்களை கண்காணிக்க, பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு பண்டிகை நாளில், கொங்கு மண்டலத்திலும், காவேரி டெல்டா மாவட்டங்களிலும், 250 கோடிக்கு ரூபாய்க்கு சரக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்து இருந்தோம். 325 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனையானது. நடப்பாண்டு சரக்கு விற்பனையின் இலக்கு, 350 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலக்கு அதிகரிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், விலையும் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதால், விற்பனை இலக்கை எளிதாக தாண்டி விடலாம். இலக்கு உயர்வுக்கு ஏற்றபடி, சரக்குகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும், வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடைகளுக்கு தேவையான சரக்குகளில் பாஸ்ட் மூவிங் சரக்கு, ஸ்லோ மூவிங் சரக்கு, ஹை ரேட் சரக்கு, புதிய அறிமுக சரக்கு என, பிரித்து சப்ளை செய்யப்படுறகிறது. கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு பண்டிகை நாளில், பல கடைகளில் சரக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சரக்குகள் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு ஆடிப்பண்டிகைக்காக காவேரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, கொங்கு மண்டலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யவதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் அந்தந்த மாவட்ட குடோனுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த சரக்குகளை கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.கடைகளின் சராசரி விற்பனையை கருத்தில் கொண்டு தேவையான பிராந்தி, ரம், விஸ்கி, பீர், ஓயின் ஆகியவற்றின் வழக்கமான சப்ளையில் இருந்து கூடுதலாக, 50 சதவீதம் முதல், 75 சதவீதம் வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடை விற்பனையாளர்கள் கேட்டுக் கொண்டபடியும் சரக்கு அதிகரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு டாஸ்மாக் சரக்குகளின் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதால், ஆடிப் பண்டிகை நாளில் மட்டும், தமிழகம் முழுவதும், 400 கோடி ரூபாய்க்கு விற்பனை இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ