உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கழிவுநீர் குள சீரமைப்பு பணி தொடக்கம்

கழிவுநீர் குள சீரமைப்பு பணி தொடக்கம்

பனமரத்துப்பட்டி: மல்லுார் டவுன் பஞ்சாயத்தில் உள்ள அத்திக்குட்டையில் கழி-வுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சீரமைப்பு பணி மேற்கொள்ள, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல் கட்டமாக, செடி, கொடி, முட்புதர்களை சுத்தம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் கூறி-யதாவது:அத்திக்குட்டைக்கு வரும் கழிவு நீர், அங்கே தேங்காதபடி வெளி-யேற்ற, கால்வாய் கட்டப்படுகிறது. மக்கள் வசிக்கும் பகுதியிலும் கழிவுநீர் செல்லாதபடி, சுற்றுச்சுவர் கட்டப்படும். நடைபயிற்சிக்கு, பேவர் பிளாக் சாலை அமைத்து மின் விளக்கு பொருத்தப்படும். சிறுவர் பூங்கா, குழந்தைகள் விளையாட்டு உப-கரணங்கள், சிமென்ட் இருக்கைகள், கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளன. தேவைப்பட்டால் கூடுதலாக, பொது நிதி ஒதுக்கி, அத்திக்குட்டை முழுமையாக சீரமைக்கப்படும். இவ்-வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை