3 இடங்களில் நிழற்கூடம்: மேட்டூர் எம்.எல்.ஏ., திறப்பு
மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ்., வைத்தீஸ்வரா பள்ளி அருகே, கருமலைக்கூடல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, கோனுார் ஊராட்சி சந்தைதானம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே என, 3 இடங்களில், மேட்டூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 26 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூடங்கள் கட்டப்பட்டன. பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர், எம்.எல்.ஏ., சதாசிவம், நேற்று, நிழற்கூடங்களை, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து திறந்து வைத்தார். மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலர் ராமகிருஷ்ணன், மேட்டூர் நகர செயலர் மதியழகன், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து செயலர் லுதின்குமார் உள்ளிட்ட, பா.ம.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.