உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குறு மைய தடகளம்: மாணவர்கள் ஆர்வம்

குறு மைய தடகளம்: மாணவர்கள் ஆர்வம்

சேலம், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், பாரதியார் தின விளையாட்டு போட்டி, சேலம் மாவட்டத்தில் குறுமைய அளவில் நடந்து வருகிறது. வாழப்பாடி குறுமைய அளவில் ஆண்கள் தடகள போட்டி, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. குறுவட்ட செயலர் இலியாஸ் உசேனி தொடங்கி வைத்தார். 60 பள்ளிகளில் இருந்து, 540 மாணவர்கள் பங்கேற்றனர். 100, 200, 400, 1,500, 3,000 மீ., ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து பிரிவுகளிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர்கள், மண்டல போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இன்று அதே மைதானத்தில் பெண்களுக்கு தடகள போட்டி நடக்கிறது. ஏற்பாடுகளை சிங்கிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ