இரு மொபட் மீது கார் மோதி விபத்து அக்கா, தம்பி பலி; இருவர் படுகாயம்
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே, இரு மொபட்கள் மீது, கார் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். இருவர் காயங்களுடன் மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டனர். சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு, 56. இவரது அக்கா மல்லிகா, 60, உறவினர் பானுமதி, 62. இவர்கள் மூவரும் சேலத்தில் இருந்து, எக்ஸ்எல் ஹெவி டூட்டி மொபட்டில், தார-மங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூரில் உள்ள, குலதெய்வ கோவி-லுக்கு நேற்று வந்தனர். மதியம் 12:45 மணிக்கு அழகுசமுத்திரம் அருகே, படையப்பா நகர் பகுதியில் மொபட்டில் வந்து கொண்டி-ருந்தனர்.அப்போது எதிரே, சேலம் சித்தனுாரை சேர்ந்த ஜவஹர், 49, என்பவர் ஓட்டி வந்த பிஎம்.டபிள்யூ கார், மொபட் மீது வேகமாக மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த காயங்களுடன் சேட்டு, மல்லிகா ஆகியோர் இறந்தனர். பானுமதி பலத்த காயமடைந்தார். மொபட் மீது மோதி நிற்காமல் சென்ற கார், சிறிது தூரத்தில் எதிரே வந்த கருக்கல்வாடி புகையிலைக்-காரன் தெருவை சேர்ந்த கந்தசாமி, 57, என்பவர் ஓட்டி வந்த ஆக்-டிவா மொபட் மீது மோதி நின்றது.இதில் காயமடைந்த கந்தசாமியை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மக்கள் காரில் வந்த ஜவஹரை பிடித்து, தாரமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார், ஜவஹரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்-றனர்.