குழந்தை நேய ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
குழந்தை நேய ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்ஓமலுார், நவ. 23--சேலம் மாவட்ட சமூக பாதுகாப்பு மற்றும் போலீஸ் துறை சார்பில், ஓமலுாரில் குழந்தை நேய ஆசிரியருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீமுரளி தலைமை வகித்தார்.ஓமலுார், காடையாம்பட்டியை சேர்ந்த அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பள்ளிக்கு ஒருவர், குழந்தை நேய ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர்கள், இந்த முகாமில் பங்கேற்றனர். அவர்களுக்கு, குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த சட்டங்கள், குழந்தை நேய அணுகுமுறை குறித்து, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.தொடர்ந்து சேலம், ஏ.டி.எஸ்.பி., அண்ணாதுரை பேசுகையில், ''குழந்தை நேய ஆசிரியர்கள், மிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளாக பாவித்து அணுகி தீர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த விபரம் வெளியிடவோ, அவர்களை தனிமைப்படுத்தவோ, தனியாக விசாரிக்கவோ கூடாது. தேவையான நேரத்தில், 'கவுன்சிலிங்' வழங்க வேண்டும்,'' என்றார்.இதில் குழந்தை நலக்குழு தலைவர் ஜெயந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ராஜ், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ராஜ்குமார், குழந்தை உதவி மைய ஒருங்கிணைப்பாளர் கண்ணன், குழந்தைகள் நேய ஆசிரியர்கள், 50 பேர் பங்கேற்றனர்.