உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டுமான தொழிலாளருக்கு ஊதியத்துடன் திறன் பயிற்சி

கட்டுமான தொழிலாளருக்கு ஊதியத்துடன் திறன் பயிற்சி

சேலம், சேலம், தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா(சமூக பாதுகாப்பு திட்டம்) அறிக்கை:சேலம் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து, 7 நாட்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 40 வயதுக்குட்பட்ட மேசன், பார்பெண்டர், எலக்ட்ரீஷியன், கார்பென்டர், பிளம்பர், வெல்டர், கொல்லர், கண்ணாடி வேலை, 'ஏசி' மெக்கானிக், பெயின்டர், டைல் லேயர் மற்றும் சிட்டாள் என, 12 தொழில் பிரிவுகளில், காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சேலத்தில் கோரிமேடு, மேட்டூர், கருமந்துறை ஆகிய இடங்களில் அரசு ஐ.டி.ஐ.,க்களில், இப்பயிற்சி வழங்கப்படும். இதில் பங்கேற்போருக்கு, பயிற்சி சான்றிதழ் மற்றும் கட்டணம் இல்லாமல் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடித்ததும், 7 நாட்களுக்கு, தினமும் ஊதியமாக, 800 வீதம், தொழிலாளர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.அதனால் தொழிலாளர்கள், நல வாரிய பதிவு அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் கோரிமேடு, வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து, பயிற்சியில் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ