மேலும் செய்திகள்
கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவன் கொலை: மனைவி கைது
27-Nov-2024
சேலம், டிச. 12-சேலம், லைன்மேடு, நாகப்பன் பிரதான சாலையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45. இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன் கார்த்திகேயன், 20. குடும்ப தகராறில் கணவரை பிரிந்து தாயும், மகனும் தனியே வசிக்கின்றனர்.நேற்று முன்தினம் வெங்கடேஷ், 'எனக்கு சேர வேண்டிய சொத்தின் பங்கு வேண்டும்' என, மனைவி, மகனிடம் கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கார்த்திகேயன், கிரிக்கெட் மட்டையால் தந்தையை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, கார்த்திகேயனை, போலீசார் கைது செய்தனர்.
27-Nov-2024