உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கத்தியால் குத்தி மாமனாரை கொன்ற மருமகன் கைது

கத்தியால் குத்தி மாமனாரை கொன்ற மருமகன் கைது

ஓமலுார்:கத்தியால் குத்தி, மாமனாரை கொலை செய்த மருமகனை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்தவர் ஆடு வியாபாரி மயில்சாமி, 35. இவரது மனைவி மகேஸ்வரி, 32. தம்பதிக்கு ப்ரியதர்ஷினி, 13, கார்த்திகா, 11, கோபிகாஸ்ரீ, 9 என மூன்று மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லை என அடிக்கடி மயில்சாமி, மகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில், மகேஸ்வரி கோபித்துக்கொண்டு, காட்டுவளவில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றார். அக்., 3 இரவு, 10:00 மணிக்கு, அங்கு சென்ற மயில்சாமி, மகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது மகேஸ்வரியின் தந்தை பழனிசாமி, 52, 'எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம்' என, மருமகனிடம் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மயில்சாமி, இடுப்பில் வைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியால், பழனிசாமி வயிற்றில் குத்தினார். இதில், படுகாயம் அடைந்த பழனிசாமி உயிரிழந்தார். தீவட்டிப்பட்டி போலீசார், மயில்சாமியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ