உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்கள் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை

மக்கள் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை

தாரமங்கலம், டிச. 8-நாமக்கல் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற ஓட்டுப்போட்ட, தாரமங்கலம் நகர பகுதி மக்களுக்கு, எம்.பி., மாதேஸ்வரன் நேற்று நன்றி தெரிவித்தார். தண்டுமாரியம்மன் கோவில் பகுதியில், அவர் பேசியதாவது:இது நன்றி அறிவிப்பு கூட்டமாக மட்டுமின்றி, மக்கள் குறை கேட்பு கூட்டமாகவும் நடக்கிறது. இதில் மக்கள் கொடுத்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தாரமங்கலம் மின் மயானத்துக்கு, நகராட்சி தலைவர் கேட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு அமைக்க, 15 நாட்களில் பூமிபூஜை செய்யப்படும். முதல்வர் ஸ்டாலின், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக, நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். தி.மு.க.,வின் சேலம் மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, நகராட்சி தலைவர் குணசேகரன், நகர நிர்வாகிகள், கவுன்சிலர்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி