உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி

தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி

சேலம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு வீரர்களுக்கு, பேரிடர் மீட்பு பணியின்போது சிறப்பு நீச்சல் பயிற்சி தேவைப்படுகிறது. இதை கருத்தில் வைத்து, மாவட்டத்தில் உள்ள, 15 தீயணைப்பு நிலையங்களில், தகுதியான, 19 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சேலம் காந்தி மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில், 12 சிறப்பு உயர்நிலை நீச்சல் பயிற்சி வகுப்பு நேற்று முதல் தொடங்கியது. சேலம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அரசு நீச்சல் பயிற்சியாளர் மகேந்திரன் குழுவினர், பயிற்சி அளித்தனர். மாவட்ட தீ தடுப்புக்குழு நிலைய அலுவலர்கள் ராஜசேகரன், ரமேஷ்பாபு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ