உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் வழியே சிறப்பு ரயில் நீட்டிப்பு

சேலம் வழியே சிறப்பு ரயில் நீட்டிப்பு

சேலம்: சேலம் வழியே, எர்ணாகுளம்-பெங்களூரு இடையே இயக்கப்-பட்ட சிறப்பு ரயில், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எர்ணாகுளம் - யலஹங்கா (பெங்களூரு) சிறப்பு ரயில் ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில், மதியம், 12:40 மணிக்கு புறப்-பட்டு போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியே அன்று இரவு, 11:00 மணிக்கு யலஹங்கா சென்றடையும். இந்த ரயில் செப்., 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. யலஹங்கா-எர்ணாகுளம் சிறப்பு ரயில் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் அதிகாலை, 5:00 மணிக்கு புறப்பட்டு கிருஷ்-ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே அன்று மதியம், 2:20 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ