ஹூப்ளி - காரைக்குடி இடையே வரும் 14ல் சிறப்பு ரயில் இயக்கம்
சேலம்: கர்நாடக மாநிலம், ஹூப்ளி - காரைக்குடி இடையே, பய-ணிகள் நெரிசலை தவிர்க்க வரும், 14ல் சிறப்பு ரயில் இயக்கப்படு-கிறது. ஹூப்ளியில் மாலை, 4:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 11:00 மணிக்கு காரைக்குடியை சென்றடைகிறது. இந்த ரயில், ஹாவேரி, ஹரிஹர், தாவணகெரே, பிரூர், அரசிகெரே, தும்கூர், சிக்க பனாவரா, பெங்களூரு ஆகிய ஊர்களில் நின்று செல்லும். 15 அதிகாலை, 5:00 மணிக்கு சேலம், 5:40 க்கு நாமக்கல், 6:28 மணிக்கு கரூர், 8:45 மணிக்கு திருச்சியில் நின்று செல்லும்.மறு மார்க்க ரயில் காரைக்குடியில், 15 மாலை, 6:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 2:40க்கு ஹூப்ளியை அடைகிறது. இந்த ரயில் இரவு 8:35 மணிக்கு திருச்சி சந்திப்பு, 10:13க்கு கரூர், 10:48க்கு நாமக்கல், 16ம் தேதி இரவு, 12:05 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.