மேலும் செய்திகள்
15 கலைஞர்கள் விருது வழங்கி கவுரவிப்பு
26-Aug-2025
ஓமலுார், சேலம் பெரியார் பல்கலையில், கலைஞர் ஆய்வு மையம் சார்பில் இரு நாட்களாக, பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடந்தன. முன்னதாக, பல்கலை நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்ரமணி தொடங்கி வைத்தார். சமூகநீதி நாயகர்கள், சுயமரியாதை சுடர்கள், பகுத்தறிவின் அறிவியல் ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி; அண்ணாவின் மொழிநயம், கலைஞரின் பண்பாட்டு புரட்சி, உலகமயமாகும் பெரியார் தலைப்பில் கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு நேற்று நிறைவு பெற்றது. 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், திறமைகளை வெளிப்படுத்தினர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரும், 17ல் பரிசு வழங்கப்பட உள்ளது.
26-Aug-2025