நாளை முதல் கோகுலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சை மையம் செயல்படும்
சேலம், சேலம், ஸ்ரீகோகுலம் மருத்துவமனையில், முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் நாளை தொடங்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி கூறியதாவது:கோகுலம் மருத்துவமனையில் பிரத்யேக முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது. நவீன மைக்ராஸ்கோப், எண்டோஸ்கோபி மூலம் நுண்துளை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்வதன் மூலம், ரத்த இழப்பு மற்றும் வலிகள் மிக குறைவு என்பதோடு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.இதற்கு சேலம், ஜங்ஷன் பிரதான சாலையில் உள்ள, சி.ஜெ., பளாசியோ ஓட்டலில், செப்., 7(நாளை) அன்று நடக்க உள்ள விழாவில், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமை வகித்து, முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைக்க உள்ளார். ஜி.டி.பி., குழும தலைவர் முத்துராஜன், இந்திய மருத்துவ சங்கத்தலைவர் பிரகாசம் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.மருத்துவர்கள் பிரகாசம், ராஜேஷ், கார்த்திகேயன், ஜோ மார்ஷல் லியோ, புனீத், சஞ்சய், சுப்பிரமணியன், ஜெயதேவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.