உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கல்

விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கல்

சேலம், அக். 20-சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நேரு கலையரங்கில் சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று, காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. அமைச்சர்கள் ராஜேந்திரன், மதிவேந்தன் முன்னிலை வகிக்கின்றனர். துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்து, விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார். 1,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பெற்றுக்கொள்கின்றனர்.தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில், 3,583 பயனாளிகளுக்கு, 33.26 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி துணை முதல்வர் உதயநிதி பேசுகிறார்.பின் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் கருணாநிதி விளையாட்டு உபகரணங்களை கொண்டு செல்லும் வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.இதில் கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வ கணபதி, எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள், மக்கள் பங்கேற்கின்றனர் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி