விளையாட்டு அரங்கு அமைச்சர் ஆய்வு
சேலம், சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி அருகே, 18 ஏக்கரில், 20 கோடி ரூபாய் மதிப்பில், மக்கள், விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டுக்கு, பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. அங்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கலெக்டர் பிருந்தாதேவி, மகளிர் திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.